கபாலி கலைஞர்களுக்கு கன்டிஷன் போட்ட ரஞ்சித்..!


கபாலி கலைஞர்களுக்கு கன்டிஷன் போட்ட ரஞ்சித்..!

ஒவ்வொரு படம் வெளியாகும் போது அப்படத்தில் உள்ள கலைஞர்களை பத்திரிகைகள் பேட்டி காண்பது இயல்பு.

அதுவும் ரஜினி போன்ற பெரிய நட்சத்திரங்களின் படம் என்றால், ஏதாவது தீனி கிடைக்காதா? என மீடியாக்கள் சுற்றி வளைத்துவிடும்.

இந்நிலையில் கபாலி படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல்கள் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

எனவே, படம் பற்றிய எந்தவொரு தகவலும் கசிந்து விடக்கூடாது என்பதால் கபாலியில் நடித்த கலைஞர்களுக்கு இயக்குனர் ரஞ்சித் அன்பு கட்டளை விதித்துள்ளார்.

படம் தொடர்பாக எந்த பேட்டியும் கொடுக்கக்கூடாது என கண்டிப்பாக கூறிவிட்டாராம்.