தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த ‘கபாலி’க்கு குரல் கொடுப்பவர் யார்..?


தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த ‘கபாலி’க்கு குரல் கொடுப்பவர் யார்..?

இதுவரை தமிழ் படங்கள் பெறாத சிறப்புகளை கபாலி படம் பெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் படைத்த சாதனை தாங்கள் அறிந்ததே.

தற்போது இப்படத்தை மலேசியா மக்களுக்காக மலாய் மொழியில் டப் செய்யவுள்ளனர்.

வேறு எந்த தமிழ் படங்களும் இம்மொழியில் டப் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மலாய் மொழி பேசத் தெரிந்த பலரிடமும் இதற்கான ஆடிசன்ஸை நடத்தியுள்ளனர்.

கிட்டதட்ட 15 நாட்களாக நடைபெற்ற இத்தேர்வில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் தீவிர ரஜினி ரசிகரான அருண் என்பவர் தேர்வாகியுள்ளார். அவர்தான் ரஜினியின் குரலுக்கு டப்பிங் பேச இருக்கிறாராம்.

இதற்காக மலாய் மொழியில் கபாலி டீசரும் தயாராகியுள்ளது.

வருகிற ஜூன் 5ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் கபாலியின் பாடல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.