கர்நாடகாவில் ‘கபாலி’…. ‘லிங்கா’வுடன் லிங்க் ஆனது எப்படி..?


கர்நாடகாவில் ‘கபாலி’…. ‘லிங்கா’வுடன் லிங்க் ஆனது எப்படி..?

ரஜினியின் கபாலியின் பாடல்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க… நெருங்க.. நெருப்புடா என்று கொதிக்கும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

அதுப்போல் இப்படத்தின் வியாபாரமும் கொடி கட்டிப் பறக்க தொடங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் இதன் வியாபாரம் ரூ. 8 கோடியை தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் தாணுவே தெரிவித்து இருந்தார்.

தற்போது கர்நாடகாவில் ரூ 10 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.