கபாலி ரகசியத்தை உடைத்த ராதிகா… கடுப்பில் ரஜினி ரசிகர்கள்..!


கபாலி ரகசியத்தை உடைத்த ராதிகா… கடுப்பில் ரஜினி ரசிகர்கள்..!

இந்தி, பெங்காலி, மராத்தி படங்களில் நடித்த ராதிகா ஆப்தே தற்போது ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது சமீபத்தி பேட்டியில் கபாலி பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ரஜினி சார் மிக மிக எளிமையானவர். அவருடன் நடித்தது என் பாக்கியம்.

கபாலி வழக்கமான ரஜினி படமாக இருக்காது. ஆக்ஷன் கமர்ஷியல் மசாலா விஷயங்கள் இருக்காது.

ஆனால் இதில் ஒரு புதுமாதிரியான ரஜினியை நீங்கள் உணர்வீர்கள். அந்த கேரக்டரில் ரஜினி சார் மாஸ் காட்டியுள்ளார்” என்று பேட்டியளித்துள்ளார்.

சமீபத்தில்தான் இயக்குனர் ரஞ்சித் படம் பற்றிய தகவல்களை யாரும் பேட்டியில் கூறக்கூடாது என தெரிவித்தார்.

ஆனால் கபாலி நாயகி படம் பற்றிய தகவல்களை கூறிவருவதால் ரஜினி ரசிகர்கள் ராதிகா மீது கடுப்பில் இருக்கிறார்களாம்.