‘படையப்பா’வை விட பத்து மடங்கு வியாபாரத்தில் ‘கபாலி’!


‘படையப்பா’வை விட பத்து மடங்கு வியாபாரத்தில் ‘கபாலி’!

ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. இவரின் ‘பாபா’, ‘லிங்கா’ படத்திற்கு என்னதான் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இன்றும் ஈடு இணையற்ற சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

இவர் திரையுலகிற்கு வந்து 40 வருடங்களை கடந்து விட்ட போதிலும் இன்றும் இந்தியளவில் அதிகபட்ச சம்பளம் பெறுகிறார். காரணம் இவருக்கும் இவரது படங்களுக்கும் இருக்கும் வியாபாரம்தான். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் இந்தியளவில் சாதனை படைத்தது என்றால்  ‘எந்திரன்’ படம் உலகளவில் சாதனை படைத்தது.

இந்நிலையில் ரஜினி தற்போது நடித்து வரும் ‘கபாலி’ படத்திற்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 18 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘படையப்பாபடத்தின் வெளிநாட்டு உரிமை மட்டும் ரூ.3.5 கோடிக்குக்கு மேல் விலைபோனது. தற்போது ‘கபாலிபடத்தின் வெளிநாட்டு உரிமை மட்டும் ரூ.35கோடிக்கு வியாபாரம் பேசப்பட்டு வருகிறதாம். இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து வரும் நிலையில் இதன் வியாபாரம் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.