கபாலி பாப்கார்ன்… மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.!


கபாலி பாப்கார்ன்… மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.!

இந்தியாவைப் போலவே மலேசியா நாட்டிலும் ரஜினிக்கு இருக்கும் வரவேற்பை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

அண்மையில் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போதும் நாம் அறிந்தோம்.

கபாலி திரைப்படத்தை வரவேற்க மலேசியாவே காத்திருக்கிறது.

இப்படத்தை மலேசியாவில் மட்டும் மாலிக் என்பவர் 320 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவிருக்கிறாராம்.

எனவே, இதற்கான ஏற்பாடுகளை தற்போதே துவங்கிவிட்ட்டுள்ளது கோல்டன் சினிமாஸ்.

இதனால் ரசிகர்களை கவரும் வகையில் கபாலி படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்ட பார்கார்ன் பாக்ஸ்களை அங்கு விற்பனைக்கு வைத்துள்ளாராம்.

இதனை ரஜினி ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி ருசித்து மகிழ்கின்றனர்.