தமிழே எட்டிப்பார்க்காத நாடுகளில் ‘கபாலி’… இதான் ரஜினி மேஜிக்…?


தமிழே எட்டிப்பார்க்காத நாடுகளில் ‘கபாலி’… இதான் ரஜினி மேஜிக்…?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர், எவரும் எதிர்பாராத வகையில் பெரும் சாதனைகளை உலகளவில் படைத்து வருகிறது.

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் பேசப்படுகிற நம் தமிழ் மொழியை, கபாலி டீசர் மூலம் உலகெங்கும் பேச வைத்துவிட்டார் ரஜினிகாந்த் என்று சொன்னால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே, இப்படத்தை உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக முறையில் வெளியிடும் முடிவில் இருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு.

இதனால்தான் படத்தின் வெளியீடும் சற்று தாமதமாகுவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கதை உலகம் முழுவதும் பிரபலமான ‘கேங்ஸ்டர்’ கதை என்பதால் எல்லா நாடுகளிலும் இது ரீச் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத நாடுகளில் இருந்தும் கூட இப்படத்தை வெளியிட ஆர்வமாக பேசி வருகிறார்களாம் விநியோகஸ்தர்கள்.

எனவே, ரஜினி என்ற இந்த மேஜிக்கின் மூலம் சுமார் ரூ. 300 கோடிவரை வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் தயாரிப்பாளர்.