கட் ஆகும் கபாலி ரன்னிங் டைம்… அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்..!


கட் ஆகும் கபாலி ரன்னிங் டைம்… அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்..!

கபாலி கவுண்ட் டவுன் ஸ்டார்ட் என்பது போல, கபாலி ரிலீஸ் நாளை எண்ணி ரசிகர்கள் காத்திருக்க தொடங்கி விட்டனர்.

எனவே, இப்படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட் முதல் ரன்னிங் டைம் வரை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றனர்.

ஜுலை 1ம் தேதி ரிலிசாகவுள்ள நிலையில், ரன்னிங் டைம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இப்படம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடக்கூடியதாம். தற்போது படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் அதிகமானால் படம் இழுவை என்ற கருத்து பரவலாக உள்ளது.

எனவே, படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் கட் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இது மற்ற ரசிகர்களுக்கு ஓகே என்றாலும், தலைவரின் தரிசனம் கூடுதலாக கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால், இப்படி கட் பண்ண போறாங்களே..? என அதிர்ச்சியில் கூறி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.