‘கபாலி’யை காப்பாற்றுங்கள்… ரஜினிகாந்த் ரசிகர்கள் குரல்..!


‘கபாலி’யை காப்பாற்றுங்கள்… ரஜினிகாந்த் ரசிகர்கள் குரல்..!

‘கபாலி’யே எங்களை காப்பாற்றுங்கள்…’ இந்த குரல்கள் ஒருவேளை ‘கபாலி’ படத்தில் ஒலிக்கப்படலாம். காரணம் படத்தில் ரஜினி டான் வேடம் ஏற்கிறார்.

ஆனால் படம் வருவதற்கு முன்பு ‘கபாலி’யை காப்பாற்றுங்கள் என்றே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன…? அதையும்தான் கொஞ்சம் பார்ப்போமே…

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை எல்லாரிடமும் செல்போன் உள்ளது. அப்புறமென்ன கைய வச்சிட்டு சும்மா இருப்பார்கள்… ‘வாங்க… செல்பி… எடுக்கிறோம்.. குல்பி எடுக்கிறோம் ‘ சொல்லிட்டு எல்லாத்தையும் படம் பிடிச்சிடுறாங்க.

அதுவும் மலேசியாவில் நடந்த கபாலி சூட்டிங்குல நம்ம சூப்பர் ஸ்டாரை பார்த்த விட்டுவோமா என்ன? ச்சும்மா… க்ளிக்.. க்ளிக்க்க.. படம் பிடிச்சு தள்ளிட்டாங்க. பயபுள்ளைங்க அதுல ஒரு பாடல் காட்சியையும் சூட் பண்ணி நெட்ல போட்டுட்டாங்க.

இவ்வளவு நாளா இதை ‘கபாலி’ குழு கண்டுகிட்டோ என்னமோ? ரஜினி ரசிகர்கள் இதற்கு எதிராக பேச ஆரம்பிச்சுட்டாங்க… இப்படியே போயிட்டு இருந்துச்சுன்னா நாங்க படத்தை முன்னாடியே பார்த்துடுவோம் போல.

எல்லா சீன்களும் வெளிவந்துடும் போல… அதனால ‘கபாலி’யை காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ரஞ்சித் ஜி…. ரஜினி பேன்ஸ் குரல் கேட்டுச்சா… கொஞ்சம் ஸ்டெப்ஸ் எடுங்க ஜி..