ரஜினிக்கு மற்றொரு ஜோடி தேடும் ‘கபாலி’ படக்குழு!


ரஜினிக்கு மற்றொரு ஜோடி தேடும் ‘கபாலி’ படக்குழு!

‘லிங்கா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ரஜினி இருவேடமேற்கிறார். இளவயது ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மற்றொரு ரஜினி டான் (தாதா) ஆக நடிக்கிறார். இவ்வேடம் மிகவும் பவர்புல்லான வேடம் என்பதால் இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையும் ஒரு பவர்புல்லான நடிகையான வேண்டும் என்பதால் தேடுதல் வேட்டை தொடர்கிறது. அதுவும் தேசிய விருது பெற்ற நடிகையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் இயக்குனர் ரஞ்சித்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கிறது. இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு முரளி, எடிட்டிங்க்கு ப்ரவீன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன், ரஜினியின் மகளாக தன்ஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.