கபாலி குழுவின் ஏமாற்றமளிக்கும் அடுத்த நடவடிக்கை..


கபாலி குழுவின் ஏமாற்றமளிக்கும் அடுத்த நடவடிக்கை..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மலேசியாவில் அளிக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ரஜினியும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் மலேசியாவில் இருந்து விடைபெற்றார்.

தற்போது லைக்கா தயாரிக்க, ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்நிலையில் மீண்டும் மலேசியா செல்ல இருக்கிறது கபாலி படக்குழு.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கு முன் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த ‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் மிகப்பிரம்மாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் நடத்தியுள்ளது.

இப்போது ‘கபாலி’ இசை விழாவும் அங்கே நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மக்களுக்கு ஏமாற்றம்தான்.