முட்டி மோதி பாத்தாச்சு; இனி முடியாது… தெளிவான முடிவில் தல-தளபதி ரசிகர்கள்..!


முட்டி மோதி பாத்தாச்சு; இனி முடியாது… தெளிவான முடிவில் தல-தளபதி ரசிகர்கள்..!

ஒவ்வொரு வருடமும், மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை அமர்க்களப்படுத்தி விடுவார்கள் தல ரசிகர்கள். அஜித் பர்த்டே என்பதை ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள்.

இதுபோல் விஜய் ரசிகர்களும் தங்கள் தளபதி படம் வந்தாலும் டீசர் வந்தாலும் ட்ரெண்டாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இதனால் கபாலியே வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என கனவு கண்டு கொண்டிருந்தனர்.

ஆனால், மே 1ஆம் தேதி வெளியான ரஜினியின் கபாலி டீசர், இவ்வுலகில் எவருமே எதிர்பாராத வகையில் யூடியுப்பில் சாதனை படைத்து வருகிறது.

தற்போது டீசர் வெளியாகி, இரண்டரை நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 8,644,163 பார்வையாளர்கள் இந்த டீசரை யூடிப்பில் பார்த்துள்ளனர்.

மேலும் மே 1ஆம் தேதி #KabaliTeaser , #Magizhchi, #kabalida, #KabaliTamilMovie, #Thalaivar, #padhmavibhusan, #neruppuda, #மகிழ்ச்சி என டீசர் பற்றிய ஹேஸ்டேக்குகளே டிரெண்டிங்கில் இருந்தன.

இதனால், தலைவர் ரஜினியுடன் முட்டி மோதினாலும் எதுவும் நடக்காது. அவர் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார்.

நம்முடைய டிரெண்ட் மோதல்களை நம்முடனே முடித்துக் கொள்வோம் என தெளிவான முடிவை எடுத்துவிட்டார்களாம் தல-தளபதி ரசிகர்கள்.