ரஜினியுடன் இணைந்து வரும் விஜய்.. ‘தெறி’க்க விட காத்திருக்கும் ரசிகர்கள்..!


ரஜினியுடன் இணைந்து வரும் விஜய்.. ‘தெறி’க்க விட காத்திருக்கும் ரசிகர்கள்..!

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் விஜய் மூன்று கெட்டப்பில் நடித்துள்ள தெறி. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் டீஸரை திரையிடவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான பணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது படக்குழு. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த இருபடங்களையும் கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார் என்பது தாங்கள் அறிந்த்தே.

தலைவரும், தளபதியும் ஒண்ணா வந்தா சும்மா இருப்பார்களா ரசிகர்கள்? நிச்சயம் திரையரங்குகள் அதிரத்தான் போகிறது…