‘வேதாளம்’, ‘தெறி’யை தெறிக்கவிட ‘கபாலி’ போட்ட கன்டிஷன்..!


‘வேதாளம்’, ‘தெறி’யை தெறிக்கவிட ‘கபாலி’ போட்ட கன்டிஷன்..!

ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் பாட்ஷா. இதில் டான் கேரக்டரில் நடித்து, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பை பெற்றார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கபாலி படத்திலும் டானாக நடித்துள்ளதால் இதற்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான கபாலி டீசரை இதுவரை 6 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது ஆசியா கண்டத்திலேயே பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களின் டீசர் நள்ளிரவிலேயே வெளியாகிறது.

முக்கியமாக அஜித்தின் வேதாளம் டீசர் 2015 அக்டோபர் 7ஆம் தேதி நள்ளிரவில் வெளியானது. அதுபோல் விஜய்யின் தெறி டீசர் 2016 பிப்ரவரி 5ஆம் தேதி நள்ளிரவில் வெளியானது.

எனவே, கபாலி படத்தையும் நள்ளிரவில் வெளியிட முடிவு செய்திருந்தாராம் ரஞ்சித்.

ஆனால் தன்னுடைய ரசிகர்கள், கண் விழித்து காத்திருக்கக் கூடாது. அவர்கள் நிம்மதியாக உறங்கட்டும். பகலில் டீசரை வெளியிடுங்கள். என்று கன்டிஷனாக சொல்லிவிட்டாராம் ரஜினி. அதன்படி பகலில் வெளியிடப்பட்டது.

இனிமேலாவது மற்ற நடிகர்களும் ரஜினியை பின்பற்றி, ரசிகர்களுக்காக பகலில் வெளியிடுவார்களா? என்பதை பார்ப்போம்…