‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..!


‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..!

மே 1ஆம் தேதி கபாலி தினத்தில்.. (ஓ..ஸாரி..) உழைப்பாளர் தினத்தில் கபாலி டீசர் காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.

டீசர் வெளியான சில நொடிகளிலேயே பல லட்சம் பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்தார் கபாலி. இதனால் யூடியுப் தளமே அதிர்ந்தது.

சில நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. ஒன்றை மணி நேரத்தில் 1 லட்சம் லைக்ஸை பெற்றது.

  • 13 நிமிடங்களில் 31,000 லைக்ஸை பெற்றது.
  • 22 நிமிடங்களில் 45,000 லைக்ஸை பெற்றது.
  • 25 நிமிடங்களில் 50,000 லைக்ஸை பெற்றது.
  • 30 நிமிடங்களில் 60,000 லைக்ஸை பெற்றது.
  • 50 நிமிடங்களில் 75,000 லைக்ஸை பெற்றது.
  • 57 நிமிடங்களில் 80,000 லைக்ஸை பெற்றது.
  • 60 நிமிடங்களில் 82,000 லைக்ஸை பெற்றது.

எட்டு நாட்களில் 15 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது

தற்போது 28 நாட்களை கடந்துள்ள நிலையில், 20 மில்லியன் (2 கோடி) பார்வையாளர்களை கடந்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் இரண்டாவது இடத்தையும் கபாலி பிடித்துள்ளது.

கபாலியால் பெருமை என்றளவில் யூடியுப் நிர்வாகமே ரஜினியை வாழ்த்தியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.