‘கொல வெறி’ பாடலையும் ‘தெறி’க்கவிட்ட ‘கபாலி’..!


‘கொல வெறி’ பாடலையும் ‘தெறி’க்கவிட்ட ‘கபாலி’..!

ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன் நடித்து வெளியான படம் 3.

இப்படத்தில் அனிருத் மெட்டமைத்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது. இப்படம் 2012ஆம் வெளியானது.

இந்தியாவில் பதிவிட்டப்பட்ட வீடியோக்களில் கொலைவெறி பாடல் தான் இதுவரை முன்னணியில் இருந்தது.

இதுவரை இப்பாடல் மட்டும் 4.11 லட்சம் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த கொலவெறியின் சாதனையையும் கபாலி முறியடித்து முன்னேறியுள்ளது.

அதாவது 4.12 லைக்ஸ் பெற்று இந்தியாவின் நம்பர் 1 என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது.

இந்த டீசர் வெளியாகி இன்னும் 30 நாட்களை கூட கடக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.