இணையத்தில் முதல் விமர்சனம்: கபாலி டீசர் விமர்சனம்…. நெருப்புடா.!


இணையத்தில் முதல் விமர்சனம்: கபாலி டீசர் விமர்சனம்…. நெருப்புடா.!

உலக சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கபாலி டீசம் சில நொடிகளுக்கு முன் வெளியானது. இது முற்றிலும் ரஜினி ரசிகர்களுக்கான விருந்து. அதை சற்றும் குறைவில்லாமல் திகட்ட திகட்ட கொடுத்து இருக்கிறார் தலைவர். மகிழ்ச்சி.

இந்த டீசர் 1 நிமிடம் 7 நொடி ஓடக்கூடியது. இதன் ஆரம்பமே படுஅமர்களமாக இருக்கிறது.

ரஜினி நடந்துவரும் போது அந்த பாலீஸ் செய்யப்பட்ட அழகான ஷுவே அவரது ஸ்டைலான நடையை காட்டுகிறது. பாக்கெட்டில் கைவிட்ட படி ரஜினி என்ட்ரீ ஆகிறார்.

ரஜினி முகம் திரையில் தெரியும்போது நெருப்புடா.. நெருப்புடா என்ற பவர்புல்லான வார்த்தை பின்னணியில் ஒலிக்கிறது.

Free Life foundation என்ற நிறுவனத்தின் பிரஸமீட்டில் ஒரு பத்திரிகையாளர் ரஜினியை பார்த்து அண்ணே நீங்க ஏன் கேங்ஸ்டர் ஆனீங்க என்று கேட்கிறார்.

ரஜினியின் வழக்கமான அக்மார்க் அந்த கம்பீர சிரிப்பு குரல் ஒலிக்கிறது. சிரித்துக் கொண்ட்டே ரஜினி கூலிங்கிளாஸை கழட்டுகிறார்.

அதன்பின்னர் ராதிகா ஆப்தே அழகான புன்னகையுடன் மல்லிகை பூவுடன் மங்களகரமாக திரையில் தோன்றுகிறார்.

பின்னர் ரஜினியின் ஆக்ஷன் ஆரம்பமாகிறது. எதிரிகளை அடித்து நொறுக்கிறார். காஷ்ட்யூம் அனைத்தும் படு அமர்க்களம். கோட் சூட் என படு ஸ்டைலிஷாக அடித்து துவம்சம் செய்கிறார்.

இடையில் கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியில் சூட் செய்கிறார்.

rajini kabali teaser design

இதனையடுத்து நிறைய அடியாட்களுடன் இருக்கும் வில்லன் கிஷோர், யாருடா..? அந்த கபாலி அவன வரச்சொல்லுடா என அதட்டலாக உத்தரவு இடுகிறார்.

அதற்கு ரஜினி சிரித்துக்கொண்டே… தமிழ் படத்துல இங்க மரு வச்சிட்டு, மீசைய முறுக்கிகிட்டு லுங்கிய கட்டிகிட்டு,  நம்பியார்… ஹேய் கபாலின்னு கூப்பிட்ட உடனே குனிஞ்சி சொல்லுங்க எஜமான் அப்படின்னு வந்து நிப்பானே அந்த மாதிரி கபாலி நினைச்சியா டா?  கபாலி டா…. என்று டயலாக் பேசும்போது அந்த கம்பீரக் குரல்.

அதன்பின்னர்தான் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற அந்த அதிர வைக்கும் பவர்புல் எழுத்துக்கள் திரையில் தோன்றுகின்றன. அதற்கு வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இதில் அந்த பின்னணி குரல்கள் மிஸ்ஸிங்.

அதன்பின்னர் எவரும் எதிர்பாராத வகையில் ப்ளாஷ்பேக் காட்சியில் ரஜினி முழுக்க கறுப்பு முடியுடன் சேவிங் செய்த முகத்துடன் படு இளமையாக வருகிறார்.

rajini old look in kabali

அவருக்கே உரிதான அந்த படுவேகமான நடையுடன் ஸ்டைலாக தலையை கோதியபடி ஆவேசமாக செல்கிறார்.

அதன்பின்னர் மகிழ்ச்சி என்ற வார்த்தையுடன் கேங் ஸ்டர் ரஜினி பேசுவதுடன் டீசர் முடிவடைகிறது.