இந்திய சினிமாவை அசர வைக்கும் கபாலி ரிலீஸ்…!


இந்திய சினிமாவை அசர வைக்கும் கபாலி ரிலீஸ்…!

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ரஜினியின் கபாலி பாடல்களை மே 28ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி 20 நாட்களை கடக்கும் முன்னரே, இணையத்தில் 2 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதனால் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை இப்படம் ஈர்த்துள்ளது.

எனவே, கபாலி படத்தை மிகப்பெரியளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு.

தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா முழுவதும் 2000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளதாம்.

மலேசியாவில் 320 தியேட்டர்களிலும் இந்தோனோஷியாவில் 300 தியேட்டர்களிலும் வெளியிடவிருக்கிறார்களாம்.

இவை தவிர, சீனாவில் மட்டும் 4,800 தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்திய சினிமாவே கபாலி ரீலீஸை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறதாம்.