‘வில்லனுக்கே 120 நாட்கள் கால்ஷீட்டா?? கபாலி கலவரம்


‘வில்லனுக்கே 120 நாட்கள் கால்ஷீட்டா?? கபாலி கலவரம்

சூப்பர் ஸ்டார் படத்தில் எந்தவொரு நடிகர் நடித்தாலும் ரஜினி ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுவார்கள். கபாலி படத்தில் நடிக்கவிருந்த பிரகாஷ்ராஜ் விலகியதையடுத்து அக்கேரக்டரில் நடிக்கும் ஜான் விஜய்யை தற்போது உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ஓரம் போ படத்தில் அறிமுகமான இவர் தற்போது குணசித்திர கேரக்டரிலும் காமெடியாக வில்லத்தனம் செய்வதிலும் ஜொலித்து வருகிறார்.

கபாலி படத்திற்கு மட்டும் இவர் 120 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளாராம். எனவே இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினியுடன் இரண்டு மாதங்கள் நடித்தது பற்றி ஜான் விஜய் கூறியதாவது…. சூப்பர் ஸ்டார் மனதளவில் இன்னும் ஒரு குழந்தையை போல் இருக்கிறார். நகைச்சுவை உணர்வு அதிகமுள்ளவர் ரஜினி” என்றார்.