கபாலி வெளியாவதில் சிக்கல்… செக் வைக்கும் விநியோகஸ்தர்கள்..!


கபாலி வெளியாவதில் சிக்கல்… செக் வைக்கும் விநியோகஸ்தர்கள்..!

கபாலி டீசர் வெளியான நிமிடம் முதல், படத்தின் ரிலீஸ் தேதியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இப்படம் ஜுன் மாதம் முதல் வாரம் வெளியாகும் என தகவல்கள் வந்தாலும் அதை தயாரிப்பு தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இப்படத்திற்கு எதிராக சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதாவது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஜினி நடிப்பில் உருவான கோச்சடையான் படத்தின் தெலுங்கு பதிப்பு விக்ரமசிங்கா என்ற பெயரில் அங்கு வெளியானது.

ஆனால் இப்படம் எதிர்பார்த்த லாபத்தை தரவில்லை என்பதால் அங்குள்ள விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்துள்ளனராம்.

எனவே, ரூ. 7 கோடி பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் இதுவரை பணம் திருப்பித் தரப்படவில்லை.

அதனால், பிலிம் சேம்பரில் புகார் ஒன்றை அளித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

அதாவது நஷ்டத் தொகை வரும் வரை கபாலி படத்தை அங்கு திரையிடமாட்டார்களாம்.