அடுத்த வாரம் நிக்கி, அவிகாவுடன் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..!


அடுத்த வாரம் நிக்கி, அவிகாவுடன் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..!

இயக்குனர் ராஜேஷ் கொடுத்த எஸ்எம்எஸ் படம்தான் அவருக்கான முகவரியை சினிமாவில் கொடுத்தது. அதன் பின்னர் ஓகே ஓகே என்று அவரது சில படங்கள் பேசப்பட்டது.

ஆனால் இதனைத் தொடர்ந்து வெளியான படங்கள் அவரை ஆல் இன் ஆல் அழுக்கு ராஜாவாக மாற்றியது.

கதையை நம்பாமல் சரக்கை நம்பி விஎஸ்ஓபி என்ற படத்தையும் எடுத்து பார்த்தார். அதுவும் வழுக்கிவிடவே, தற்போது கடவுளை நம்பி இறங்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள ‘கடவுள் இருக்குறான் குமாரு’ (KIK) படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறாராம்.

இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார்.