அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..!


அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தல 57 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இப்படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என கூறப்பட்டு வரும் நிலையில், மற்றொரு நாயகியாக காஜல் அவர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி உள்ளிட்ட படங்களிலும், தனுஷுடன் மாரி படத்திலும் நடித்துள்ளார்.

இதுகுறித்து காஜல் அகர்வால் தன் இந்திப் படமான டோ லஃப்ஷன் கி கஹானி என்ற படத்தின் புரொமோஷன் பேட்டியில் கூறியதாவது…

“விக்ரமுடன் கருடா படத்தில் நடித்து வருகிறேன். பின்னர் அஜித்துடன் நடிக்கவிருக்கிறேன். இதன் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது” என்றார்.