‘கலாபவன் மணி மரணத்தை நம்பமாட்டேன்’ – மோகன்லால் உருக்கமான கடிதம்..!


‘கலாபவன் மணி மரணத்தை நம்பமாட்டேன்’ – மோகன்லால் உருக்கமான கடிதம்..!

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்களை தன் அருமையான நடிப்பால் கட்டிப் போட்டவர் கலாபவன் மணி. இவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும் அறிக்கைகைகளிலும் அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் அவரது நண்பரான மோகன்லால் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. இரங்கல் செய்தியும் வெளியிடவில்லை. எனவே இதுகுறித்து பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது மனம் திறந்து கலாபவன் மணி பற்றி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் மோகன்லால். அதில் அவர் கூறியிருப்பதாவது…

“என்னுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் இப்போது என்னுடன் இல்லை. அந்த பாதிப்பு ஏற்படுத்திய வலி மிகக் கொடுமையானது. பின்பு நான் எப்படி அவரது உடலை பார்க்க செல்லமுடியும். அவரது அம்மாவுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வேன்.

எனக்கு பிடித்தமானவர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை பார்க்கும் மனதைரியம் என்னிடம் இல்லை.. அவர்கள் இறந்துவிட்டதாக நான் நம்ப மாட்டேன். நான் காணாத இடத்தில் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

மணியின் ஆரம்பகால முதல் எனக்கு அவரைத் தெரியும். அவரின் வாழ்வில் நடந்த எல்லாம் எனக்கு தெரியும். அவரே அனைத்தையும் சொல்லி இருக்கிறார். என் மனதுக்கு நெருக்கமானவர் அவர்.

அப்படிபட்ட ஒருவனின் உடல் ப்ரீசரில் இருக்கும்போது என்னால் பார்க்க முடியாது. இந்த வலியை மனதில் வைத்துக் கொண்டு மீடியா முன் மைக்கை பிடித்துக்கொண்டு என்னால் பேச முடியாது.

முதலில் இந்த கடிதம் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், தற்போது எழும் விமர்சனங்களின் காரணம் கருதி எழுத வேண்டி வந்துவிட்டது”

என்று கலாபவன் மணி மரணம் குறித்து எழுதியுள்ளார் மோகன்லால்.