கபாலி கலைஞன் கலையரசனுக்கு டபுள் சந்தோஷம்…!


கபாலி கலைஞன் கலையரசனுக்கு டபுள் சந்தோஷம்…!

எங்க ஊரு மெட்ராஸு … அதுக்கு நாங்கதானே அட்ரஸு … என்பதற்கு மாறாக மெட்ராஸ் படமே கலையரசனுக்கு கலையுலகில் ஒரு அட்ரஸை பெற்றுத் தந்தது.

இதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது தனி நாயகனாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வருகிற ஏப்ரல் மாதத்தில் மட்டும் இவரது நடிப்பில் டார்லிங் 2 மற்றும் ராஜா மந்திரி ஆகிய இருபடங்கள் வெளியாகவுள்ளன.

வளர்ந்து வரும் கலைஞரான தனக்கே ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் மனிதர் படு குஷியாக இருக்கிறாராம்.

அறிமுக இயக்குகர் சதீஷ் சந்திரசேகர் என்பவர் இயக்கியுள்ள டார்லிங் 2 படத்தின் வெளியீட்டு உரிமை ஞானவேல் ராஜா பெற்றுள்ளார்.

ஸ்டூடியோ கீரின் பேனரில் இப்படம் வெளியாகவுள்ளதால், ஒட்டு மொத்த படக்குழுவே உற்சாகத்தில் காணப்படுவதாக கலையரசன் தெரிவித்துள்ளார்.