கபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது


கபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களில் நடித்தவர் கலையரசன்.

இதனைத் தொடர்ந்து ரஜினியின் கபாலி படத்திலும் நடிக்க வாய்ப்பு வழங்கியிருந்தார் இயக்குனர்.

தற்போது தனி நாயகனாக படங்களில் நடித்து வருகிறார். டார்லிங் 2 படத்தை தொடர்ந்து ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ரோகின் வெங்கடேசன் இயக்கும் இப்படத்தை சிவிகுமார் தயாரிக்கிறார்.

நாயகியாக அவன் இவன், தெகிடி படப்புகழ் ஜனனி ஐயர் நடிக்கிறார்.

பூஜையுடன் தொடங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ட்விட்டரில் கலையரசன் தெரித்துள்ளார்.