திடீர் மோதலில் பிரேமம் ஹீரோயின்ஸ் : சாய் பல்லவி – மடோனா…!


திடீர் மோதலில் பிரேமம் ஹீரோயின்ஸ் : சாய் பல்லவி – மடோனா…!

மலையாள சினிமாவில் மறக்க முடியாத படங்கள் பல இருந்தாலும், சமீபத்தில் வந்த மறக்க முடியாத படம் பிரேமம்.

இப்படத்தை போல, அதில் நடித்த மலர் டீச்சர் சாய் பல்லவி, ஷெலின் மடோனா ஆகியோரையும் யாராலும் மறக்க முடியாது.

அப்படத்தில் சில காட்சிகளில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

ஆனால் இப்படத்தை தொடர்ந்து இவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள படங்களால் இவர்களிடையே மோதல் உருவாகியுள்ளது.

சாய் பல்லவி தற்போது துல்கர் சல்மானுடன் களி படத்தில் நடித்துள்ளார். மடோனா, திலீப் உடன் கிங் லையர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த இருபடங்களும் வருகிற மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகி மோதவிருக்கிறது.

ஆனாலும் இந்த மோதலில் கூட இருவருக்கும் ஒரு சின்ன ஒற்றுமை இருக்கிறதாம். இந்த இரு படங்களில் இவர்கள் கேரக்டர்களின் பெயர் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.