சிவாஜி குடும்பத்திற்காக கமல்ஹாசன் எடுக்கும் முடிவு..!


சிவாஜி குடும்பத்திற்காக கமல்ஹாசன் எடுக்கும் முடிவு..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீதும் அவரது குடும்பத்தாரும் மீதும் அளவற்ற பாசம் வைத்திருப்பவர் கமல்ஹாசன்.

தற்போது அவர்களின் குடும்ப பேனரில் தயாராகியுள்ள ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தில் கௌவர வேடத்தில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் ஈஷான் பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சபாஷ் நாயுடு படம் தொடர்பான பணிகளில் கமல் பிஸியாக இருந்தாலும், சிவாஜி குடும்பத்தாருக்காக கலந்து கொள்வார் என்றே கூறப்படுகிறது.

பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா ஜாவேரி, பூஜா குமார், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்னர்.

இப்படத்தை அமுதேஷ்வர் இயக்க, இமான் இசையமைத்துள்ளார்.