விளம்பரத்திற்காக கொள்கையை கைவிட்ட கமல்!


விளம்பரத்திற்காக கொள்கையை கைவிட்ட கமல்!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் அந்த மார்கெட்டை பயன்படுத்திக் கொண்டு விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர். “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்ற வித்தையை அறிந்தவர்கள் இவர்கள்.  அதிலும் பிரபு, சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ், நெப்போலியன், பார்த்திபன், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் விளம்பர படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். அஜித்தும் சில வருடங்களுக்கு முன்பு காஃபி விளம்பரத்தில் நடித்திருந்தார். நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் சினிமாவை விட விளம்பரத்தில் படுபிஸி.

ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே எந்த ஒரு பொருளுக்கும் நான் விளம்பரம் செய்யமாட்டேன். அந்த பொருளின் தரத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதில் முக்கியமானவர்கள் ரஜினிகாந்த், விஜய்காந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மட்டுமே. கோடி கோடியாக பணத்தை கொட்ட விளம்பர நிறுவனங்கள் தயாராக இருந்தபோதிலும் இவர்கள் எந்த காலகட்டத்திலும் விளம்பரங்களில் நடிக்காமல் இருந்து வந்தனர். கமல் மட்டும் ஒரு சில அரசு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தன் கொள்கையில் இருந்து விலகி முதன்முறையாக ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்கவுள்ளார் கமல். இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. ‘யட்சன்’ படத்தில் நடித்த கிருஷ்ணா முதன் முறையாக கமல் நடிக்கும் விளம்பரப்படத்தை இயக்கவுள்ளார்.