கமல்ஹாசனுடன் 39 நாட்கள்… ஸ்ரீப்ரியா சொன்ன ரகசியம்!


கமல்ஹாசனுடன் 39 நாட்கள்… ஸ்ரீப்ரியா சொன்ன ரகசியம்!

மலையாளத்தில் வெற்றிப் பெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது. தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக் உரிமைகளை நடிகை ஸ்ரீப்ரியா வைத்திருந்தார். எனவே, தெலுங்கில் இப்படத்தை தயாரித்து அவரே இயக்கியிருந்தார். வெங்கடேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வெங்கடேஷ், மீனா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் இருந்தும் இப்படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களில் முடித்தார். இதனால் ஸ்ரீப்ரியாவை பாராட்டாதவர்கள் யாருமில்லை. ஆனால் இவரது மகிழ்ச்சி வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. அது கமல் போன்ற ஒரு மாபெரும் கலைஞனால் கலைக்கப்பட்டது.

மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ படத்தை இயக்கியிருந்த ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கினார். கமல்ஹாசனுடன் கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், பேபி எஸ்தர், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படியாக நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் 39 நாட்களில் அதாவது ஸ்ரீப்ரியாவை விட ஒரு நாள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

‘பாபநாசம்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இயக்குனரின் இந்த வேகம் ஸ்ரீப்ரியாவுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் தன்னுடைய சாதனையை இவர் முறியடித்துவிட்டாரே என்று புலம்பி வருகிறாராம். இதற்கு ஒத்துழைத்த கமலை பெருமையாகவும் பொறாமையாகவும் பார்க்கிறாராம் ஸ்ரீப்ரியா.