‘கமலால் பாபநாசத்திற்கு புது நிறம் கிடைத்துள்ளது’ – மீனா


‘கமலால் பாபநாசத்திற்கு புது நிறம் கிடைத்துள்ளது’ – மீனா

மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘த்ரிஷ்யம்’. இப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக்காகி அங்கும் ஹிட்டானது. இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் கமல் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியாகி தமிழகத்தில் வசூல் வேட்டை செய்து வருகிறது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், பேபி எஸ்தர், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் மீனா நாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் குறித்து மீனா கூறியதாவது… “தமிழில் ‘பாபநாசம்’ படம் பார்த்தேன். கமல்சார் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காரு. சொல்லப்போனால் படத்திற்கு ஒரு புதிய நிறத்தை கொடுத்துள்ளார். பாபநாசம் ஏரியா பாஷை படத்துக்கு இன்னும் ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது.

கெளதமி மேடமும் நல்லா நடிச்சிருக்காங்க. அவங்க நடிச்சதுல நிறைய மாற்றமும் தமிழுக்கு ஏற்றமாதிரி பண்ணியிருங்காங்க. கண்டிப்பா தமிழில் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் இந்த ராணி. (ஹி..ஹி.. த்ரிஷ்யம் படத்துல இதான் அவங்க பேரு..!)