‘இனி ரொம்ப பிஸி.. ஆனாலும் ரசிகர்களுக்காக வருவேன்..’ – கமல்


‘இனி ரொம்ப பிஸி.. ஆனாலும் ரசிகர்களுக்காக வருவேன்..’ – கமல்

வானில் உள்ள நட்சத்திரங்களைப் போல், சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் இருந்து விலகியே இருந்தனர்.

ஆனால் இன்று எந்த ஒரு பிரஸ் மீட்டும் வைக்காமல் அவர்களே தங்கள் படம் மற்றும் இதர தகவல்களை நேரடியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி, ட்விட்டரில் தன் கணக்கை தொடங்கிய கமல்ஹாசன், தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

எனவே, அவரை ட்விட்டரில் பாலோ செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

ஆனால் தற்போது தன் புதிய பட பணிகளை துவங்கியிருக்கிறாராம் கமல். இளையராஜா இசையில் ராஜீவ் குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார்.

எனவே “இனி ரொம்ப பிஸியாக இருப்பதால், தன்னால் ட்விட்டரில் எழுத முடியாது என்று கூறியுள்ளார். ஆனாலும் நேரம் கிடைக்கும்போது எனது ரசிகர்களின் ட்வீட்டுக்களை பார்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார் கமல்.