கலைக் கடவுள் கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்…!


கலைக் கடவுள் கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்…!

ஒரு காலத்தில் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட கமல்ஹாசனை இன்று உலகநாயகன் என அன்போடு அழைக்கின்றனர் அவரது ரசிகர்கள். சிறுவயது முதலே தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர் இன்றும் அதே உற்சாகத்தோடு புதுமைகளை செய்து வருகிறார். இந்திய ரசிகர்களால் இவர் கலைக்கடவுளாக பார்க்கப்படுகிறார். இன்று அவர் தன் 61வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே அவரைப் பற்றிய சில சுவையான குறிப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்….

 •  நான்கு குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் கமல். படிப்பைத் தவிர்த்து கலைகளில் அதிகம் ஆர்வம் இருந்ததால் அதில் சிறுவயதிலேயே   ஈடுபட்டார். பின்னர் தனது கலைப் பயணத்தை தொடர்ந்தார்.
 • நடிப்பைத் தவிர, பல படங்களில் பாடல்கள் எழுதியும் இருக்கிறார் பாடியும் இருக்கிறார். மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இவர் பாடியிருக்கிறார். இதுவரை கிட்டதட்ட 60 பாடல்களை பாடியுள்ளாராம். கமல்ஹாசன் முறையாக பரதநாட்டியம் கற்றவர் என்பதால் பல படங்களுக்கு நடனக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
 • நடிப்பு, நடனம் என்று இல்லாமல் இயக்கம், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ளவர் கமல்.
 • தமிழ் இலக்கியத்தில் மீது இவருக்கு காதல் இருந்ததால் ‘மையம்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். இந்த இதழை இவரது நற்பணி மன்றம் தற்போது இயக்கி வருகிறது.
 • மேலும் தனது ரசிகர் மன்றம் மூலமாக சமூக பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். ரசிகர்களையும் ஈடுப்படுத்தி வருகிறார்.  சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் இவர் சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 •  ‘ஹ்ருதயராகம் 2010’ என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஒரு அனாதை இல்லத்தை அமைத்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டி உதவி அளித்தும் வருகிறார்.
 •  1978ஆம் ஆண்டில் வாணி கணபதியை மணமுடித்த கமல் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து செய்தார். பின்னர் நடிகை சரிகாவை மணமுடித்தார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் இப்போது நடிகைகளாக உருவெடுத்துள்ளனர். பின்னர் சரிகாவும் கமலிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார். தற்போது நடிகை கௌதமியுடன் வாழ்ந்து வருகிறார் கமல்.

கமல்ஹாசன் பெற்ற விருதுகள்

 •  தனது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
 •  மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
 •  1990ஆம் ஆண்டில்  இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
 •  20 முறை  ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.

பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் அவர்களை சினிகாஃபி சார்பாக வாழ்த்துகிறோம்.