கோலிவுட் டூ பாலிவுட்…. ரஜினிகாந்த் வழியில் கமல்ஹாசன்!


கோலிவுட் டூ பாலிவுட்…. ரஜினிகாந்த் வழியில் கமல்ஹாசன்!

இப்போது தயாராகி வரும் தமிழ் படங்களின் தாரக மந்திரம் என்னவாக இருக்கும்? கோலிவுட்டில் படம் தயாரானாலும் பாலிவுட் வரை பேசப்படும் வேண்டும் என்பதுதான்.

எனவே ரஜினிகாந்த் நடிக்கும் சமீபத்திய படங்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம் இடம் பெற்று வருகின்றனர். கோச்சடையான் தீபிகா, லிங்கா சோனாக்ஷி உள்ளிட்ட பலரும் ரஜினி படங்களில் தலைகாட்டி வந்தனர். ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்திலும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கவிருக்கிறார்.

விஜய்யின் புலி படத்தில் கூட ஸ்ரீதேவி இடம் பெற காரணம் பாலிவுட் மார்கெட் வியாபாரத்தை பெற எடுத்து முயற்சிதான். இதே வழியை தற்போது கமல்ஹாசனும் கடைபிடிக்க இருக்கிறார்.

டி.கே.ராஜீவ் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் தயாராகவிருக்கிறது. எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இதில் இடம்பெற்றால் வியாபார ரீதியாக படம் லாபம் பெறும் என்பதால் பாலிவுட்டின் முன்னணி நடிகர்ளிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார்களாம்.