‘தூங்காவனம்’ ராஜேஷின் குழந்தைக்கு அழகான பெயர் சூட்டிய கமல்..!


‘தூங்காவனம்’ ராஜேஷின் குழந்தைக்கு அழகான பெயர் சூட்டிய கமல்..!

புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதில் கமல் ஒரு முன்னோடிதான்.

இவரிடம் பல வருடங்களாக உதவி இயக்குனராகப் பணியாற்றி ராஜேஷ் எம்.செல்வாவுக்கு தன்னுடைய தூங்காவனம் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து தன் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரித்தார்.

இந்நிலையில் இயக்குனர் ராஜேஷின் மனைவிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

எனவே குழந்தையைப் பார்க்க சென்ற கமல் அந்த அழகான குழந்தைக்கு ‘ஹோசிகா மிருணாளினி’ என பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் கூறியதாவது…

 

Kamal New Name

 

“என் மகளை ஆசிர்வதித்து ‘ஹோசிகா மிருணாளினி’ என கமல்ஹாசன் அவர்கள் பெயர் சூட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் என் மகளின் சிறந்த பொக்கிஷங்களில் பெயரும் ஒன்றாக இருக்கும்” என்று பெருமையாக கூறியுள்ளார்.