ஆண்டவனின் அலுவலகத்தில் அகல் விளக்கு… கைகொடுக்குமா காசோலை தூது??


ஆண்டவனின் அலுவலகத்தில் அகல் விளக்கு…  கைகொடுக்குமா காசோலை தூது??

அடைமழை வெள்ளத்தின் பிடிக்கு ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவனும் தப்பவில்லை. எல்டாம்ஸ் சாலையில் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரான கமலின் அலுவலகம் அமைந்துள்ளது. மழைவிட்டு ஐந்து நாட்களுக்கு மேலாகியும் கமல் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னமும் மின்சாரம் வரவில்லையாம்.

இதற்கு வேறு சில அரசியல் காரணங்களும் கூறப்பட்டு வருகிறது. தமிழக அரசை எதிர்த்து கமல் கூறியதாக ஒரு பேட்டி வெளியானது. ஆனால் கமல் அவ்வாறு சொல்லவில்லை என அதற்கான ஒரு விளக்கமும் அளித்திருந்தார்.

இந்நிலையில் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் நிவாரண நிதி திரட்டி வருகின்றனர். இதுநாள் வரை அறிக்கை மட்டுமே கமல் சார்பாக வந்தது. தற்போது ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை தன் உதவியாளர் மூலம் நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கியுள்ளார்.
காசோலை மூலம் சமாதானம் சொல்லியிருக்கிறார் கமல். இனியாச்சும் ஆண்டவனின் அலுவலக பல்பு எரியுமா?