‘கலாபவன் மணிக்கு வாழ நேரமில்லை…’ கமல், சூர்யா இரங்கல்.!


‘கலாபவன் மணிக்கு வாழ நேரமில்லை…’ கமல், சூர்யா இரங்கல்.!

தென்னிந்திய சினிமாவை தன் அபாரமான நடிப்பால் கவர்ந்தவர் கலாபவன் மணி. நுரையீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்ட அவரை நேற்று திடீரென மரணம் அழைத்துக் கொண்டது.

இவரது மறைவுக்கு பிரதமர், கேரள முதல்வர் மற்றும் தென்னித்திய நட்சத்திரங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கமல் கூறியதாவது…

“என் நண்பர் கலாபவன் மணியின் மறைவு மிகுந்த சோகத்தை கொடுத்துள்ளது. நுரையீரல் பிரச்சினையால் மேலும் ஒரு மலையாள சகோதரர் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது.

நிறைய திறமைகள் அவரிடம் உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கும் வாழ்வதற்கும் அவருக்கு நேரம் போதவில்லை” என்று தெரிவித்துள்ளார் கமல்.

நடிகர் சூர்யா தெரிவித்துள்ளதாவது…

“எனக்கு ஒரு நல்ல நண்பர் அவர். அவருடன் நான் பகிர்ந்துக் கொண்ட நேரங்களை என்னால் மறக்கவே முடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார்.

நடிகர் பிருத்திவிராஜ் தெரிவித்துள்ளதாவது…

“மணி சேட்டா.. என்னால் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. நீங்கள் நிறைய சாதிக்க வேண்டி இருந்தது. திடீரென எங்களை விட்டுச் சென்றது நியாயம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மம்மூட்டி, ஆதி, குஷ்பூ, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.