பிரம்மாண்டமாக நடந்த கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ இசை வெளியீட்டு விழா!


பிரம்மாண்டமாக நடந்த கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ இசை வெளியீட்டு விழா!

கமல்ஹாசன் மற்றும் லிங்குசாமி இணைந்து தயாரித்துள்ள படம் ‘உத்தமவில்லன்’. கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினரும், திரையுல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இவ்விழாவை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார்.

விழாவில் மறைந்த இயக்குனர் பாலசந்தர் கமலைப் பற்றி பேசிய ஒலிநாடாவும், கமல் தனது குருநாதர் இயக்குனர் சிகரத்தை பற்றிய பேசிய ஒலிநாடாவும் ஒலிபரப்பப்பட்டது.

படத்தின் நாயகி பூஜா குமாரின் நடனமும் கமலின் பிரபல பாடல்களுக்கு நடனக்குழுவினரின் நடனமும் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரும் ஒளிபரப்பப்பட்டது. நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் படத்தில் நடித்தபோது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் படத்தில் நடித்தவர்களும் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா ஆகியோரும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கமல்ஹாசனின் படத்தை இணைந்து தயாரித்து வெளியிடுவதில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது என்றார் லிங்குசாமி. ஏப்ரல் முதல் வாரம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளிவரவிருக்கிறது உத்தமவில்லன்.

இப்படத்தில் கமல்ஹாசனுடன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.