அண்டர்கிரவுண்ட் அரசியல்வாதிகளை தோலுரிக்க போகும் கமல்ஹாசன்!


அண்டர்கிரவுண்ட் அரசியல்வாதிகளை தோலுரிக்க போகும் கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 3 படங்கள் இந்த வருடம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது அடுத்த வருடத்திற்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்ய ஆயுத்தமாகி விட்டார்.

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களுடன் இணைந்து கமல் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தை தன் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பாக தயாரிக்க போகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள இப்படத்தை ஐந்தே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல், ஆன்மிகம் மற்றும் அரசியலை விரும்பாவிட்டாலும், அவர் படங்களில் இவை இரண்டும  குறித்த கருத்துக்கள் நிறையவே இருக்கும்.  இப்படத்தில் அண்டர்கிரவுண்ட் அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக செய்யும் சில விஷயங்களை தோலுரித்து காட்டப்போகிறாராம். வழக்கம்போல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து இந்த படத்தை உருவாக்க நினைத்துள்ளாராம் உலகநாயகன்.

‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம்-2′ ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களுக்கு இவ்வருட ஹாட்ரிக் விருந்தாக வரப்போகிறது. காத்திருங்கள் கமலின் கண்மணிகளே…