‘கமல் சாரு மகா கெட்டிக்காரு’ – எஸ்.பி.பாலசுப்ரமணியம் தாலாட்டு


‘கமல் சாரு மகா கெட்டிக்காரு’ – எஸ்.பி.பாலசுப்ரமணியம் தாலாட்டு

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசனின் கதை, திரைக்கதை வடிவத்தில் உருவாகியுள்ள படம் உத்தமவில்லன். நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்க அண்மையில் இப்படத்தின் தமிழ் பதிப்பு இசை வெளியீட்டு விழா நடந்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த், ஸ்ருதிஹாசன், கௌதமி, படத்தின் நாயகிகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்துக் கொள்ள மிகப் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். விழாவில் அவர் பேசியதாவது…

“கமல் அவர்களின் 100 படங்களுக்கு மேல் தெலுங்கில் நான் டப்பிங் பேசி இருக்கிறேன்.  கமல் என்னை அண்ணா என்றழைப்பார். இப்போது உத்தமவில்லன் படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனர் பாலசந்தர் அவர்களுடன் சில நாட்கள் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக கமலுக்கு நன்றி. கமல் ஒரு மகா கலைஞன். அவருக்கு தெரியாத வித்தை எதுவும் இல்லை எனலாம். அவரிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது.  கமல் சாரு மகா கெட்டிகாரு” என்று தாலாட்டினார் (ஸாரி) பாராட்டினார்.