உலகநாயகனின் புதிய அவதாரம்… விவேகானந்தராக மாறிய கமல்..!


உலகநாயகனின் புதிய அவதாரம்… விவேகானந்தராக மாறிய கமல்..!

உலகநாயகன் முதன்முறையாக தன் மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கும் புதிய படம் ஏப்ரல் 29இல் தொடங்கவிருக்கிறது.

இதனிடையில் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் சுவாமி விவேகானந்தரின் கெட்டப்பில் கமல் நடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கு முன்பு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்தில் விவேகானந்தர் வேடம் ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கி வரும் இப்படத்தில் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சாவேரி, ஊர்வசி, பூஜா குமார், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.