’இந்திய சுதந்திர போராட்டம் குறித்து கமல்ஹாசன்…!


’இந்திய சுதந்திர போராட்டம் குறித்து கமல்ஹாசன்…!

நேற்று (ஜனவரி 26) குடியரசு தினம், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் நடிகர் கமல், சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்தார்.

அதில் தனது முதல் பதிவாக நம் இந்திய தேசம் குறித்த தன் பார்வையை பதிவு செய்தார்.

’இந்தியாவின் சுதந்திர போராட்டம் தனித்தன்மை வாய்ந்தது. அதற்கு மரியாதை செலுத்துவதே அதனை பாதுகாக்கும் வழிமுறையும் உலக தரத்தில் உருவாக்குவதற்கான வழியும் ஆகும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கமல்ஹாசன் பாடி, இளையராஜா இசையமைத்துள்ள தேசிய கீதம் பாடலையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கமல் ட்விட்டரில் இணைந்ததற்கு அவரது மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.