ஐந்து விருதுகளை அள்ளிய ‘உத்தமவில்லன்’!


ஐந்து விருதுகளை அள்ளிய ‘உத்தமவில்லன்’!

கடந்த மே மாதம் 1ஆம் தேதி மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கமலின் ‘உத்தமவில்லன்’ வெளியானது. ரமேஷ் அரவிந்த் இயக்கிய இப்படத்தில் இயக்குனர் கே. பாலசந்தர் முக்கிய வேடம் ஏற்றிருந்தார். இவர் நடித்த கடைசி படமே இதுவே.

இவர்களுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, பார்வதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைக்க, பாடல்களை கமல் எழுதியிருந்தார்.இப்படத்தில் கமலின் ஒப்பனை மற்றும் தெய்யம் நடனம் பெரிதாக பேசப்பட்டது.

சமீபத்தில் லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘உத்தமவில்லன்’ திரையிடப்பட்டது.

அதில் சிறந்த நடிகருக்கான விருது கமல்ஹாசனுக்கும் சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான விருது ஜிப்ரானுக்கும், சிறந்த படத்திற்கான விருது ‘உத்தமவில்லன்’ திரைப்படத்திற்கும், சிறந்த சவுண்ட் டிசைன் விருது குணால்ராஜனுக்கும் என ஐந்து விருதுகளை பெற்று தந்துள்ளது.

மேலும் இப்படம் ‘ரஷ்யன் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிடப்பட்டது. இதில் சிறந்த இசையமைப்பாளர் விருதும் ஜிப்ரானுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.