உலக நாயகன் கமலின் சாதனைக்கு கிடைத்த விருது…!


உலக நாயகன் கமலின் சாதனைக்கு கிடைத்த விருது…!

ஒரு நடிகராக மட்டுமில்லாமல் திரைத்துறையை சேர்ந்த பல துறைகளிலும் ஜொலிப்பவர் உலக நாயகன் கமல்.

இந்திய சினிமாவில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இந்திய சினிமாவை உலகளவில் இடம் பெற செய்தவர்களில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

இந்நிலையில் இந்திய சினிமாவுக்கு கமல்ஹாஸன் செய்த பெரும் பங்களிப்பிற்காக ஹென்றி லாங்லாய்ஸ் விருதை பாரிஸ் நாட்டில் பெற்றுள்ளார்.

விருது குறித்து கமல் கூறுகையில்… “இந்த விருதை நான் பெறும்போது என் குரு அனந்து சார் இருந்திருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். காரணம் அவர்தான் ஹென்றி லாங்லாய்ஸ் என்ற பெயரையே எனக்கு தெரியப்படுத்தியவர்” என்று கூறினார்.

ஹென்றி லாங்லாய்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பிரபலமான சினிமா வரலாற்று ஆசிரியர். மேலும் இவர் ஒரு திரைப்பட ஆவணத் தொகுப்பாளரும் கூட.

இவர் 1977ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். எனவே அவரது பெயரில் சினிமா சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.