கமலுடன் கைகோர்க்கும் அஜித்…. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


கமலுடன் கைகோர்க்கும் அஜித்…. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தான் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் தன் படத்தில் மற்ற நாயகர்களை நடிக்க வைக்கத் தயங்காதவர் உலக நாயகன்.

எனக்குள் ஒருவன் படத்தில் மோகன்லால், குருதிப்புனல் படத்தில் அர்ஜீன், வெற்றி விழா படத்தில் பிரபு, காதலா காதலா படத்தில் பிரபுதேவா, அன்பே சிவம், மன்மதன் அம்பு படத்தில் மாதவன் என இந்தப் பட்டியல் நீளும்.

இந்நிலையில் இவருடைய படத்தில் விரைவில் அஜித் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான காலம் கனிந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அஜித்தின் மானேஜரை தன்னுடைய பி.ஆர்.ஓ.வாக கமல் நியமித்துள்ளாராம். எனவே இதன்மூலம் இருவரும் இணையும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமலும் சரி, அஜித்தும் சரி இருவரும் ஈகோ பார்க்காமல், மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கத் தயங்காதவர்கள்.

எனவே அவர்கள் இணைவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என இவர்களது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.