லிங்குசாமிக்கு உதவிட கமல்ஹாசனின் திடீர் முடிவு!


லிங்குசாமிக்கு உதவிட கமல்ஹாசனின் திடீர் முடிவு!

‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘தூங்காவனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் உலகநாயகன். இப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார். கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது.

இதில் கமலின் மனைவியாக ஆஷா சரத் நடிக்க, மற்றொரு நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். சமீபத்தில் பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டது. இன்னும் 15% படப்பிடிப்பு காட்சிகளே படமாக்கப்படவுள்ளதாம்.

இந்நிலையில் கமல், ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜாகுமார், ஜெயராமன், நாசர் உள்ளிட்டோர் நடித்த ‘உத்தமவில்லன்’ படத்தை தயாரித்து நஷ்டமடைந்த லிங்குசாமிக்கு உதவிட கமல் முன்வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தற்போது உருவாகி வரும் ‘தூங்காவனம்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல் அளிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உத்தமவில்லன் தோல்வியை ஈடுகட்ட முடியும் என்பதே உலகநாயகனின் எண்ணமாம்.