லஞ்சத்தை ஒழிக்க மீண்டு(ம்) வருகிறார் ‘இந்தியன்’ கமல்!


லஞ்சத்தை ஒழிக்க மீண்டு(ம்) வருகிறார் ‘இந்தியன்’ கமல்!

‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களை ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படம் ‘இந்தியன்’. கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் கமல், இளைஞனாகவும் முதியவராகவும் இருவேடங்களில் நடித்திருந்தார்.

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருந்தார். பெரிய வெற்றி பெற்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இப்படத்தில் மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், ‘கிரேஸி’ மோகன், சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசனங்களை சுஜாதா எழுத, ஜீவா ஒளிப்பதிவு செய்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை எடுப்பது தற்போது ட்ரெண்டாகி வருவதால் ‘இந்தியன்-2’ படத்தை எடுக்கவிருக்கிறது இதே கூட்டணி.

இதற்காக ஏ.எம்.ரத்னமும், ஷங்கரும் ஆலோசித்து ‘இந்தியன்-2’ படத்திற்கு அடித்தளமிட்டுள்ளனர். படத்தின் திரைக்கதை மற்றும் கலைஞர்கள் முடிவானவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதற்கிடையே ரஜினியின் ‘எந்திரன்-2’ படத்தை எடுப்பதற்கான முயற்சியிலும் ஷங்கர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரம் வாங்க தாத்தா.. இந்த 20 வருஷத்துல ஊழல் ரொம்ப அதிகமாச்சு…