கமலுக்கு பயந்த ஒதுங்கிய நாலு போலீஸ் யார்?


கமலுக்கு பயந்த ஒதுங்கிய நாலு போலீஸ் யார்?

ஜீத்துஜோசப் இயக்கி கமல், கௌதமி, சார்லி, கலாபவன்மணி நடித்துள்ள படம் ‘பாபநாசம்’. ரம்ஜான் அன்று (ஜூலை 17ஆம் தேதி) வெளியாகவிருந்த இப்படம் முன்பே வெளியாகவுள்ளது. அடுத்த வாரம் வருகிற ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது. இதனை இன்று அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

பண்டிகை இல்லாத நாட்களில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாக கூடாது என்ற தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டை மீறி இப்படம் வெளிவருவதால் இப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கின்றனர் சின்ன தயாரிப்பாளர்கள். இதுஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் கமல்ஹாசன் படம் வெளிவருவதால் ஜூலை 3ஆம் தேதி வெளியாகவிருந்த ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்‘ படம் தள்ளிப்போகிறது.

எனவே ஜூலை 31ஆம் தேதிக்கு இப்படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பளார் JSK சதீஷ் அறிவித்துள்ளார். அருள்நிதி, சிங்கம் புலி, பகவதி பெருமாள், ராஜ்குமார் ஆகியோர் போலீஸாக நடித்துள்ளனர். அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்திற்கு பி.ஆர். ரெஜின் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.