மொழி கற்றுக் கொடுத்தவரை வசனகர்த்தா ஆக்கிய கமல்!


மொழி கற்றுக் கொடுத்தவரை வசனகர்த்தா ஆக்கிய கமல்!

நெல்லைத் தமிழ் கற்றுத்கொடுத்த சுகா அவர்களை தன் தூங்காவனம்  படத்திற்காக வசனகர்த்தா ஆக்கினார் கமல்.

‘உத்தமவில்லன்’ படத்தை தொடர்ந்து கமல் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் நடித்து வந்தார். மலையாளத்தில் வெற்றிப் பெற்ற ‘த்ரிஷ்யம்’, தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது. தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் கமல் நெல்லைத் தமிழ் பேசும் குடும்பஸ்தராக நடித்திருக்கிறார்.

எந்த ஒரு கேரக்டரை எடுத்தாலும் அதற்கான பயிற்சியை மேற்கொள்பவர் கமல் என்பது தாங்கள் அறிந்ததே. ‘பாபநாசம்’ படத்திற்காக நெல்லைத் தமிழ் பேச வேண்டும்மென்பதால் சுகா என்பவரிடம் பயிற்சி பெற்றார். இதனால் இருவருக்குமிடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது சுகாவை ‘தூங்காவனம்’ படத்தின் வசனகர்த்தா ஆக்கியிருக்கிறார். கமல்ஹாசனை போன்று கவிதை எழுதுவதிலும் இலக்கியத்திலும் வல்லவரான சுகாவின் திறமையறிந்து அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியுள்ளார் கமல் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

காதல் கவிதைகள் மூலம் புகழ்பெற்றவர் எழுத்தாளர் சுகா. இவரை இயக்குனராக்கி தன் தம்பி சத்யா-சாந்தினி நடிக்க ‘படித்துறை’ படத்தை தயாரித்தார் ஆர்யா. அப்படம் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.