கமல்ஹாசனின் ‘தூங்காவன’த்தில் மூன்று நாயகிகள்!


கமல்ஹாசனின் ‘தூங்காவன’த்தில் மூன்று நாயகிகள்!

உத்தமவில்லன், பாபநாசம் படங்களை தொடர்ந்து கமல் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இவரின் துணை இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

‘ஓர் இரவு’ என்ற பெயரிடப்பட்டிருந்த இப்படத்தலைப்பு தற்போது ‘தூங்காவனம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாம் இப்படம். த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் மனீஷா கொய்ராலா மற்றும் ‘காவியத்தலைவன்’ அனைகா என இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அறிவிப்பு வந்தவுடன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் துவங்கும்.