கமலுக்கு தேசிய விருது கொடுத்த கேரக்டரில் நடிப்பது யார்..?


கமலுக்கு தேசிய விருது கொடுத்த கேரக்டரில் நடிப்பது யார்..?

‘மூன்றாம் பிறை’ படம் மூலம் தனது முதல் தேசிய விருதை பெற்றார் கமல்ஹாசன். பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு இசை இளையராஜா

அதன்பின்னர் இப்படம் ‘சத்மா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகி அங்கும் சூப்பர் ஹிட்டடித்தது.

தற்போது 30 வருடங்களுக்கு பிறகு இந்தியில் இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்யவுள்ளனர். இயக்குனர் Loyd Baptista அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட்டை தொடர்ந்து இப்படத்தை ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர்.

ஆனால் நடிகர்கள் தேர்வு வெகு நாட்களாக நடந்து வந்தாலும் இன்னும் முடிவு பெறவில்லை என கூறப்படுகிறது.

அதுசரிதான்.. கமல் வேடத்தில் நடிக்க யார்தான் முன்வருவார்கள்..?